Friday, August 31, 2012

அது ஒரு கனாகாலம்-1970-80.


       உங்கள் பார்வைக்கு முற்றிலும் புதிய, எழுபதுகளின் இறுதியில் எடுக்கப்பட்ட அரிதான புகைப்படம்.இது அநேகமா ஒரு பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டமாகவோ அல்லது அந்நாளைய முன்னாள் மாணவர்கள் சந்திப்பின் போது எடுத்த புகைப்படமாகவோ இருக்கலாம்னு நினைக்கிறன்.(யாரவது வெவரம் தெரிஞ்சவங்க இருந்த சொல்லுங்கப்பா,அதுக்காக உனக்கு வெவரமில்லையனு குதர்க்கமா கேட்டிங்கனா 23ம் புலிகேசி கிட்ட சொல்லி அரை படி கட்டெறும்ப காதுல விடசொல்லிருவேன் ஆமா)

   (புகைப்படத்த பெரியதா பாக்கனும்ன படத்துமேல double கிளிக் பண்ணுங்க )

போட்டோவுல நம்ம கணக்கு மாஸ்டர்,திருமூர்த்தி சார்,வெள்ளிங்கிரி சார் (கூடவே நம்ம சரவணா குமார் ரொம்ப குட்டி பையனா),விவசாய ஆசிரியர் வீரப்ப செட்டியார்,வேணுகோபால் ஆசிரியர்,எல் ஐ சி கந்தசாமி அண்ணன்,மேனேஜர் அய்யன்,டாக்டர் அரங்கசாமி,வளத்தி கணேஷ் அண்ணன்,வால்தோட்டம் கண்ணுசாமி,ஏறக்கதோட்டம் கந்தசாமி ,ஊர் பெரியவர்கள் மற்றும் இதர கர்லிங் முடி வளர்க்கும் அந்நாளைய இளைஞர் குலாம்(குலாம்னா கூட்டம்னு அர்த்தம் ,நீங்க பாட்டுக்கு ஏதோ முஸ்லீம் பேருன்னு நினைக்காதிங்க).

இது மாதிரியான பழைய கால புகைப்படங்கள் உங்ககிட்ட இருந்த மறக்காம வாகராயம்பாளயம்ல இருக்கிற NETPARK BROWSING CENTER க்கு எடுத்திட்டு வந்து குடுங்க ,அவங்க ஸ்கேன் பண்ணி எங்களுக்கு அனுப்பிடுவாங்க.(இது பத்தின அதிக தகவலுக்கு சரவணகுமார்(+91-9442507277)அவர்கள தொடர்பு கொள்ளுங்க).

படிச்சுட்டு கண்டிப்பா உங்களோட கருத்துகள comments  பகிர்ந்துக்குங்க.comment எப்படி போடறதுன்னு தெரியலன நம்ம P.K.செல்வராஜ் அண்ணாவ(+91-9362362114) தொடர்பு கொள்ளுங்க.

வாழ்த்துக்களுடன்,
முன்னாள் மாணவர்கள்-வாகை.

Monday, August 27, 2012

அது ஒரு கனா காலம்-1974.

வணக்கம் நண்பர்களே,
         உங்களோட பார்வைக்கு மிக அரிதான 1974ம் வருடத்திய நம்ம பள்ளியில நடந்த"மலர்ந்தவாழ்வு"அப்படிங்கற நாடகத்துல எடுத்த புகைப்படங்கள்.
                                   
                      "உயர்ந்த மனிதர்னு" கேரக்ட்டர்  கொடுத்திருப்பாங்களோ ..


எப்படி என் "ஸ்டைல்" அப்படின்னு தாடிக்காரர் கிட்ட கேட்டுட்டரோ!!!இப்படி நம்மளை மொறைக்கிறாரு, ஆனா இவருக்கு தாடியும் அவருக்கு டையும் சூப்பரா செட் ஆயிருக்கு மா.... 


இவங்க தான் நாடகத்தோட ஹீரோ ஹீரோயின், கோட்டு சூட்டுல ஹீரோ ஸ்மார்டா இருக்கார்ல... 

ஹீரோயின் கோப பார்வை தாங்காம ஹீரோ எஸ்கேப் ஆகற சீன்.இது நம்மளோட கண்டுபிடிப்பு-(யாரப்பா அது நோபல் பரிசு பார்சல் சொல்றது..அட இதுக்கெல்லாம்  நோபல் பரிசு குடுக்கமாட்டங்கப்பா அட சொன்ன கேளுங்க)   
                                
ஹா ஹா ... 'பில்லா3 'ல நான்  தான்  ஹீரோ, எப்படி இருக்கு இந்த கோட்டு கண்ணாடி அப்புறம் இந்த டூ ஹீரோயின்ஸ்....(போலீஸ்: வக்கீல் தம்பி,போன் ஒயர்  பிஞ்சி  ஒரு வாரம் ஆச்சு). 

புகைப்படங்கள பெரிதாக்கி பார்க்கணும்னா அதன் மேல கிளிக் பண்ணுங்க.

டிஸ்கி:
3வது புகைப்படதுல கோட்டு சூட்டு போட்டுட்டு மைனர் மாதிரி போஸ் கொடுகிறவர் உங்க எல்லாருக்கும் ரொம்ப தெரிஞ்சவர் தான், அவரு ஓய்வு பெற்ற வாகையை சேர்ந்த ஆசிரியர்.

உங்களால முடிஞ்சா புகைப்படதுல இருக்கிறது யாருன்னு கண்டுபிடிங்க அத நம்ம பொன்விழா மெய்லுக்கு(ponvizha.vagaischool@gmail.com) அனுப்புங்க..."சபாஷ் கோவாலு" பட்டத்த வெல்லுங்க...  

இன்னும் நிறைய பதிவிட போகிறோம் காத்திருங்க,செப்டம்பர் ரெண்டை மறந்திராதிங்க...

வாழ்த்துக்களுடன்,
முன்னாள் மாணவர்கள்-வாகை.


Tuesday, August 21, 2012

50ம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம்-ஆலோசனை கூட்ட அழைப்பு.



                        
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்,

2012ம் வருடம் மிக சிறப்பு வாய்ந்த வருடமாக அமைந்திருக்கிறது, நமது நாடு ஒலிம்பிக் போட்டிகளில் எப்போதும் இல்லாத அளவுக்கு ஆறு பதக்கங்களை வென்று வந்திருக்கிறது அவற்றில் இரண்டு பதக்கங்கள் பெண் வீராங்கனைகள் வென்றுகொடுத்தது அளவில்லா மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அந்த மகிழ்ச்சிக்கு சற்றும் குறையாத வகையில் நாம் படித்த வாகை மேல்நிலை பள்ளி தனது 50 வருட சேவையை எட்டியுள்ளது ,இது போன்ற நிகழ்வுகள் மிகவும் அரிதானவை.

இந்த பள்ளியில் படிக்குங்கால் அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவங்களை கொடுத்திருக்கலாம்,அது படிப்பாக இருக்கலாம்,விளையாட்டாக இருக்கலாம் ,மகிழ்ச்சிகரமானதாக இருக்கலாம் ஏன் துக்ககரமனதாக கூட இருக்கலாம்.அவை எதுவாக இருந்தாலும்,இப்போது அந்த பள்ளிபருவ நாட்களை நினைத்துபார்க்கும் போது ஒரு வித சந்தோஷ உணர்வு மனதுக்குள் எழுகிறது.

இந்த அரை நுற்றாண்டு காலம் இப்பள்ளி பல்வேறு நிகழ்வுகளை கடந்து இன்னும் வலிமையாக பெருமையாக வரும் காலத்தை எதிர்நோக்கி நடைபோடுகிறது,இப்படிப்பட்ட ஒரு சந்தர்பத்தில் நாம் நம் பள்ளியின் வரலாற்றையும்,பெருமையையும் அது கடந்து வந்த பாதைகளையும்,இன்னல்களையும் இவ்வுலகறிய எடுத்து சொல்லவும்,இப்பள்ளியினை அடுத்த தலைமுறை பள்ளியாக முன்னிறுத்தவும் இப்பொன்விழா கொண்டாட்டம் வழி செய்யும் என கருதி அதற்க்கான முன்னேற்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட ஒரு விழா எடுப்பது நமது கடமையும் கூட,எனவே இந்த கொண்டாட்டத்தில் அனைவரும் தன்னை ஒரு பகுதியாக இணைத்துக்கொள்ள அன்போடு வேண்டிக்கொள்கிறோம்.

இந்த கொண்டாட்டம் நம் பள்ளியின் கொண்டாட்டம் அது நம் தாய்க்கு கொடுக்கும் மரியாதையை போன்றது.இந்த விழாவினை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்ல உங்கள் அனைவரின் வழிகாட்டுதலும் அன்பும் முக்கியமானவை,எனவே உங்கள் உள்ளக் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்,உங்களை இக்கொண்டட்டதில் ஒருவராக இணைத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள ஏதுவாக வருகிற நாள் 02.09.2012 அன்று ஆலோசனை கூட்டம் நம் வாகை பள்ளியிலே நடைபெறவுள்ளது,இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்தி பள்ளிக்கு உதவிடுவீர்.

தொடர்புக்கு:
9842381818, 9095017383, 9362362114, 9842219212, 9842323009
9345245279, 9442507277, (0)9880057050.

இன்னும் நீங்கள் அறியாத புதிய தகவல்கள் இந்த தளத்தில் பகிரப்படவுள்ளன,காத்திருங்கள்......

என்றும் அன்போடு,
முன்னாள் மாணவர்கள்-வாகை