Monday, October 22, 2012

பள்ளி இன்ப சுற்றுலா(School Tour)-3

இன்றைக்கு உங்களோட பகிர்ந்துக்கப்போற புகைப்படங்கள் ரொம்ப முக்கியமானது, இதுல கிட்டத்தட்ட நம்ம பகுதிய சேர்ந்த இந்நாளைய 30-40 வயதுடைய நமக்கு ரொம்ப அறிமுகமானவங்க இருக்காங்க... இதோ அந்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு..  




கரிச்சிபாளையம் பாலு,வளர்மதி ஏஜென்சி கஜேந்திரமுர்த்தி,குமரன் ரேடியோஸ் சசிகுமார்,கௌரிஷங்கர்,வாகை கோபால்,செலம்பாராயம்பாளையம் மயில்சாமி,சுப்பையன் டீ கடை லோகநாதன்,ஆலாம்பாளையம் சண்முகம்,அரிசிக்கடை அருள்வேல்,ரேடியோ கடை பிரகாஷ்... இவுங்க எனக்கு தெரிஞ்சவங்க உங்களுக்கு தெரிஞ்சவங்க யாராவது இருந்த மெய்லுக்கு அனுப்புங்க..      


சுப்பையன் டீ கடை சுமதி அக்கா,லக்ஷ்மி மெடிக்கல் அக்கா மற்றும் பலர்...














வாழ்த்துக்களுடன்,
முன்னாள் மாணவர்கள்-வாகை

Friday, October 19, 2012

ஆசிரியர் நடராஜ்

ஆசிரியர் நடராஜ் ஓவிய ஆசிரியராக நம் பள்ளியில் சுமார் 1991ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார்.தொடர்ந்து பலவருடங்கள் ஓவிய ஆசிரியராக பணியாற்றி பின் தமிழ் ஆசிரியராக இப்பள்ளியிலேயே தன் பணியினை தொடர்ந்தார்..

அவர் தனக்குள் பல பரிணமங்கள் கொண்டிருந்தது நிறைய பேருக்கு தெரியாத ஒரு விஷயம். அவருக்கு கிளாஸ் பெய்ண்டிங்,வெல்டிங்,தச்சு வேலைகள்,புகைப்படம் எடுப்பது(போடோகிராபீ )போன்றவற்றை தொழில் ரீதியாக நுணுக்கமாக செய்யும் திறன் பெற்றவர், தவிர நன்றாக பாடக்கூடியவர்... 

இதோ உங்கள் பார்வைக்கு அவர் ரசித்து வரைந்த அன்னை தெரசா அவர்களின் ஓவியம் , ஓவியத்துடன் அதன் அருகில் இருக்கும் வசனம் மனதினை மிக ஆழமாக சிந்திக்கவைக்கிறது... அவர் இன்று நம்முடன் தொடர்பில் இல்லை யாராவது அவரை பற்றிய தகவல் தெரிந்தால் கண்டிப்பாக தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.

நடராஜ் ஆசிரியருக்கு பக்கத்தில் இருப்பவர் திரு தங்கவேல் ஆசிரியர்... இவரைப்பற்றி பிறிதொரு நாளில் பதிவிடுகிறோம். 



வாழ்த்துக்களுடன்,
முன்னாள் மாணவர்கள்-வாகை.

Tuesday, October 16, 2012

மீண்டும் பள்ளிக்கு போகலாம்(Get-To-Gather) 1985

ஏறக்குறைய இருபத்திநான்கு ஆண்டுகள் கழிந்த பிறகு சந்தித்துக்கொண்ட மாணவர்கள்.புகைப்படங்களை பகிர்ந்து கொண்டவர் திரு இளங்கோ அவர்கள்.

அனைவரின் கண்களில் தெரியும் அந்த குழந்தைபருவ குதூகல சிரிப்பு எதனை கொடுத்தாலும் பெறமுடியாது ... அது அனந்த சிரிப்பு, அன்பு கலந்த நேசம், காலம் கடந்த கனிவு... வார்த்தைகளில் வர்ணிப்பது இந்த எளியவனால் முடியாத காரியம்....  



































 வாழ்த்துக்களுடன்,
முன்னாள் மாணவர்கள்-வாகை