Sunday, December 30, 2012

Tuesday, December 18, 2012

அள்ளிக் கொடுத்த கைகள்-1(M.S.P சகோதரர்கள்)


நடந்து முடிந்த பொன்விழா ஆலோசனை கூட்டத்தில் நம் பள்ளிக்கு மிகவும் தேவை படுகின்ற உதவிகள் அறிவிக்கபட்டிருந்தது, 

பள்ளியின் தேவைகள்:

கூட்டம் நடைபெறும் பொழுதே முதல் ஆளாக தாங்கள் (திரு.R.மயில்சாமி, திரு.R.செல்வராஜ் , திரு.R.பொன்னுசாமி சகோதரர்கள்) உயர்நிலைபள்ளியில் இருந்து மேல்நிலைபள்ளியாக தரம் உயர்த்தி அரசு அங்கிகாரம் பெற  நம் பள்ளி அரசுக்கு செலுத்தவேண்டிய நிலுவை தொகை ரூ 81000.00 (ரூபாய் எண்த்தோராயிரம்) முழவதையும்  செலுத்திவிடுகிறோம் என உறுதியளித்திருந்தனர்.

ஆலோசனை கூட்டத்தில்: 

சொன்ன வார்த்தை தவறாது அடுத்த சில நாட்களுக்குள்ளாகவே ண்த்தோராயிரம் ரூபாய் தயார் செய்துவிட்டு பள்ளிக்கு தெரிவித்தனர்.
பணத்தை அரசு கருவூலத்தில் செலுத்த தேவையான விண்ணப்ப படிவத்தை தலைமைஆசிரியரிடமிருந்து பெற திரு.சசிகுமார் , திரு.பிரபு மற்றும் திரு.P.K.செல்வராஜ் ஆகியோர் உதவி செய்தனர். பின்னர் திரு R.பொன்னுசாமி அவர்கள் கருவூலத்தில் தொகையை செலுத்தி அதற்கான இரசீதை தலைமைஆசிரியரிடம் ஒப்படைத்து தங்களது கடைமையை செவ்வனே நிறைவேற்றினார்.

இரசீது:

இதன் காரணமாக 
1)அரசு நம்பள்ளிக்கு தேவையான ஆய்வக வசதிகள் செய்து கொடுக்கவும்,
2)புதிய ஆசிரியர் நியமனம் செய்யவும்
3)புதிய கட்டிடங்கள் அமைக்கும் பணிகள் துவங்கவும்
   வழிவகை ஏற்பட்டுள்ளது. 
4)அது மட்டுமல்லாது பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நமது பள்ளியிலேயே நடக்கவும் அரசிடம் அனுமதி  கோரப்படவுள்ளது.
5) இதன் மூலம்  இனி வரும் வருடங்களில் மாணாக்கர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன...

இந்த முக்கியமான செயலை அனைவரும் பாராட்டி அவர்களுக்கும், இவ்வுலகிற்க்கு நன்மக்கள் ஈந்த திரு ராசப்பன்-திருமதி வள்ளியம்மாள் அவர்களுக்கும் தம் உளமார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறோம்...

 பாராட்டப்பட்ட நல்லுள்ளங்கள்:

இந்த மூன்று சகோதரர்களில் முதலாமானவர் திரு.R.மயில்சாமி அவர்கள் சின்னியம்பாளையத்தில் உள்ள தொழிற்சாலையில் தலைமை தொழில்நுட்ப பொறியாளராகவும், இரண்டாமானவர் திரு.R.செல்வராஜ் முதுநிலை அறிவியல் பட்டம்(MS) பெற்று சுமார் 7 ஆண்டுகளாக அவர்கள் பெங்களுருவில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார் கடைக்குட்டி திரு. R.பொன்னுசாமி அவர்கள் பட்டய கணக்காளர்(CA) படித்து முடித்துவிட்டு தொழிற் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

இச்சகோதரர்களின் சமூக நோக்குள்ள உன்னதமான செயல் நம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறது.இவர்களை பின்பற்றி தாங்கள் தங்களால் இயன்ற உதவிகளை வழங்குமாறு அன்போடு கேட்டுகொள்கிறோம்.

நம் பள்ளி மாணவர்கள் படிப்பில்  மட்டுமல்ல "கொடை"யிலும் சிறந்தவர்கள் என்பதற்க்கு இம்மூவரே சாட்சி.

நீங்கள் அவர்களுக்கு தொலைபேசி முகமையில் உங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்க  
திரு.R.மயில்சாமி -      9942328568,
திரு.R.செல்வராஜ்- (0)-9900210765,
திரு. R.பொன்னுசாமி-9942372949.

வாழ்த்துக்களுடன்,
முன்னாள் மாணவர்கள்-வாகை.