1962-2012 அரை நூற்றாண்டு பள்ளி-ஒரு சகாப்தம். 50ம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம்
Sunday, November 24, 2013
Monday, October 7, 2013
பொன்விழா ஆலோசனை கூட்டம்-பகுதி 1
முன்பொருநாள் ஆலோசனை கூட்டம் ஒரு முன்னோட்டம் பற்றி பதிவிட்டிருந்தோம் அதன் தொடர்ச்சியாக ஆலோசனை கூட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் உங்கள் பார்வைக்காக...
மேடையும் இருக்கைகளும் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்விற்க்காக காத்துக்கிடந்தன...
நாங்கள் ஒவ்வொருவரும் படபடப்போடு பள்ளியின் வாயிலில் விழி வைத்து காத்திருந்தோம்..
ஒவ்வொருவராக வரத்தொடங்கியதும் உள்ளம் உவகை கொண்டது.. அனைவரின் வருகையும் பதிவேட்டில் பதிவுசெய்ய ஒரு குழு தயாராக இருந்தது...
நம் மாணவர்கள் சாரை சாரையாய் வந்தவண்ணம் இருந்தனர்.. அனைவரும் வருகைபதிவேட்டில் தமது முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை பதிந்து நிகழ்வில் கலந்துகொண்டனர்....
கூட்டத்தின் விருந்தினர்கள் சிறப்பான முறையில் வரவேற்கப்பட்டனர்...
தமிழ்தாய் வாழ்த்துடன் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது...
வந்திருந்த அனைவரையும் திரு செல்வராஜ் மற்றும் திரு சசிகுமார் அவர்கள் வரவேற்றனர்...
திரு ரத்தினம் ஐயா அவர்கள் பள்ளி கடந்துவந்த பாதைகளும் அதில் வந்த சோதனைகளும் அப்போது உதவிய நல்உள்ளங்களையும் நினைவுகூர்ந்தார்..
அதனை தொடர்ந்து திரு இளங்கோவன் அவர்கள் பொன்விழா பற்றியும் அதன் ஆரம்பம் குறித்தும் விளக்கினார்..
திரு பிரபு அவர்கள்-பொன்விழா ஏன் கொண்டாட வேண்டும் அதன் பின்னணி என்ன, பொன்விழா கொண்டாட்டம் மட்டுமல்ல அதனை தொடர்ந்து நாம் செய்ய வேண்டிய பணிகள் , நம் மாணவர்களுக்கு செய்து கொடுக்க வேண்டிய வசதிகள், மொழிகள் பயில்தல், பொன்விழாவினை கடந்து ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து உரையாற்றினார்..
நமது திரு அரங்கசாமி ஐயா அவர்கள் பள்ளியின் வளர்ச்சி குறித்தும் அவர் பள்ளியின் பால் கொண்ட அன்பு குறித்தும் மாணவ சமுதாயம் எவ்வாறு கடமையாற்றவேண்டும் எனபது குறித்தும் உரையாற்றினார் ...
முன்னாள் மாணவரும் இந்நாள் ஆசிரியருமான திரு கணேசன் அவர்கள் தங்கள் கருத்தை பதிவுசெய்தார்...
திரு பாலசுப்ரமணி ஐயா அவர்கள் பள்ளியின் தற்போதைய நிலைமையும் தேவைப்படும் உதவிகள் குறித்தும் கூறினார்..நம் மாணவர்கள் அனைவரும் ஒன்று கூடி நம் பள்ளிக்கு உதவ வேண்டுமென கேட்டுக்கொண்டார்...
அதனை தொடந்து நம் பள்ளியின் முன்னாள் மாணவர் திரு தாமோதரன் அண்ணா அவர்கள் பள்ளிகுறித்து அவர்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டார். பொன்விழா குழுவினரை பாராட்டி அவர்களது செயல்களுக்கு தக்க உறுதுணையாக தானும் இருப்பேன் என உறுதியளித்தார்....
திரு ராஜேந்திரன் தனது கருத்துகளை பதிவு செய்தபோது...
நமது மதிப்புமிக்க நல்லாசிரியை திருமதி கலைச்செல்வி அவர்கள் உரையாற்றியபோது..
திரு திருமூர்த்தி ஐயா அவர்களின் உரையின் போது...
நமது பள்ளியின் பால் அளவுகடந்த நேசம் கொண்ட முன்னாள் தலைமை ஆசிரியை சரோஜா அவர்கள் தமது கருத்தை பதிவுசெய்த போது...
திரு சரவணகுமார் அவர்கள் தமது கருத்துக்களை பதிவு செய்த போது...
மருத்துவர் திரு அலி பாபா அவர்கள் தமது கருத்தினை பதிவு செய்த போது..
இறுதியாக நன்றியுரை வழங்கிய திரு சதாசிவம் அவர்கள்..
நாட்டுப்பண் இசைக்க கூட்டம் இனிதே நிறைவு பெற்றது...கூடத்திற்கு பிறகான அளவளாவல்...
நாளை பொன்விழா ஆலோசனை கூட்டத்தில் நடந்த பிற நிகழ்வுகளையும் எடுக்கப்பட்ட முடிவுகளையும் பற்றி பதிவிடுகிறோம்...
நன்றியுடன்,
முன்னாள் மாணவர்கள்-வாகை.
Subscribe to:
Posts (Atom)