Friday, October 19, 2012

ஆசிரியர் நடராஜ்

ஆசிரியர் நடராஜ் ஓவிய ஆசிரியராக நம் பள்ளியில் சுமார் 1991ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார்.தொடர்ந்து பலவருடங்கள் ஓவிய ஆசிரியராக பணியாற்றி பின் தமிழ் ஆசிரியராக இப்பள்ளியிலேயே தன் பணியினை தொடர்ந்தார்..

அவர் தனக்குள் பல பரிணமங்கள் கொண்டிருந்தது நிறைய பேருக்கு தெரியாத ஒரு விஷயம். அவருக்கு கிளாஸ் பெய்ண்டிங்,வெல்டிங்,தச்சு வேலைகள்,புகைப்படம் எடுப்பது(போடோகிராபீ )போன்றவற்றை தொழில் ரீதியாக நுணுக்கமாக செய்யும் திறன் பெற்றவர், தவிர நன்றாக பாடக்கூடியவர்... 

இதோ உங்கள் பார்வைக்கு அவர் ரசித்து வரைந்த அன்னை தெரசா அவர்களின் ஓவியம் , ஓவியத்துடன் அதன் அருகில் இருக்கும் வசனம் மனதினை மிக ஆழமாக சிந்திக்கவைக்கிறது... அவர் இன்று நம்முடன் தொடர்பில் இல்லை யாராவது அவரை பற்றிய தகவல் தெரிந்தால் கண்டிப்பாக தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.

நடராஜ் ஆசிரியருக்கு பக்கத்தில் இருப்பவர் திரு தங்கவேல் ஆசிரியர்... இவரைப்பற்றி பிறிதொரு நாளில் பதிவிடுகிறோம். 



வாழ்த்துக்களுடன்,
முன்னாள் மாணவர்கள்-வாகை.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் இங்கே பதியுங்கள்..