Thursday, October 3, 2013

வணக்கம் மக்களே-


இவ்வளவு நாளா இணையம் வாயிலாக பள்ளியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பணிகளையும் புதிய நிகழ்வுகளையும் உங்களுக்கு தெரிவிக்காமல் இருந்ததற்க்கு மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளரான என்னை பெரியமனசு பண்ணி மன்னியுங்கள்...(மக்கள்:அட மன்னிச்சு விட்டாச்சு எங்க கால விடுப்பா, போய் வேலைய பாக்கணும் )

களப்பணியில் அதிகம் ஈடுபட்டதன் விளைவே இது.(நெசமாதாங்க மக்களே நம்புங்க)
 
ரொம்ப நாளாவே உங்களை வலைத்தளம் மூலமாக தொடர்புகொள்ளமுடியாமல் போனது குழுவுக்கு வருத்தமே..(அப்ப உனக்கு வருத்தமில்லையானு கேக்கமாட்டிங்கனு நெனைக்கிறேன்)

நாள்:02.10.2013:

நேற்றைய நல்ல நாளில் தேசப்பிதா மகாத்மா காந்தி ஜெயந்தியை முன்னிட்டு குழுவினர் சார்பாகவும் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் சார்பாகவும் அன்னாரது  திருஉருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.



நேற்று நம்ம உடற்கல்வி ஆசிரியர் பள்ளியில வேலை பாத்துகிட்டு இருந்தாரு.. நம்ம பள்ளி மாணவர்கள் அவருக்கு நல்ல ஒத்துழைப்பு குடுத்தாங்க... நம்ம பசங்க சும்மா சுறுசுறுன்னு தேன்பூச்சி கணக்கா வேலை பாத்தாங்க...படங்கள பாத்திங்கனாவே உங்களுக்கு தெரியும்..




அந்த பசுமை படைக்கு நம்ம வாழ்த்துக்கள்....


பல தகவல்கள் உங்களோட பகிர்ந்துக்க தயாரா இருக்கு... 


இனிமே தெனமு சந்திக்கிரோமுன்னு சொல்லிட்டு...போயிட்டு வர்றனுங்க....


இப்படிக்கு
முன்னாள் மாணவர்கள்-வாகை

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் இங்கே பதியுங்கள்..