உங்கள் பார்வைக்கு முற்றிலும் புதிய, எழுபதுகளின் இறுதியில் எடுக்கப்பட்ட அரிதான புகைப்படம்.இது அநேகமா ஒரு பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டமாகவோ அல்லது அந்நாளைய முன்னாள் மாணவர்கள் சந்திப்பின் போது எடுத்த புகைப்படமாகவோ இருக்கலாம்னு நினைக்கிறன்.(யாரவது வெவரம் தெரிஞ்சவங்க இருந்த சொல்லுங்கப்பா,அதுக்காக உனக்கு வெவரமில்லையனு குதர்க்கமா கேட்டிங்கனா 23ம் புலிகேசி கிட்ட சொல்லி அரை படி கட்டெறும்ப காதுல விடசொல்லிருவேன் ஆமா)
(புகைப்படத்த பெரியதா பாக்கனும்ன படத்துமேல double கிளிக் பண்ணுங்க )
போட்டோவுல நம்ம கணக்கு மாஸ்டர்,திருமூர்த்தி சார்,வெள்ளிங்கிரி சார் (கூடவே நம்ம சரவணா குமார் ரொம்ப குட்டி பையனா),விவசாய ஆசிரியர் வீரப்ப செட்டியார்,வேணுகோபால் ஆசிரியர்,எல் ஐ சி கந்தசாமி அண்ணன்,மேனேஜர் அய்யன்,டாக்டர் அரங்கசாமி,வளத்தி கணேஷ் அண்ணன்,வால்தோட்டம் கண்ணுசாமி,ஏறக்கதோட்டம் கந்தசாமி ,ஊர் பெரியவர்கள் மற்றும் இதர கர்லிங் முடி வளர்க்கும் அந்நாளைய இளைஞர் குலாம்(குலாம்னா கூட்டம்னு அர்த்தம் ,நீங்க பாட்டுக்கு ஏதோ முஸ்லீம் பேருன்னு நினைக்காதிங்க).
இது மாதிரியான பழைய கால புகைப்படங்கள் உங்ககிட்ட இருந்த மறக்காம வாகராயம்பாளயம்ல இருக்கிற NETPARK BROWSING CENTER க்கு எடுத்திட்டு வந்து குடுங்க ,அவங்க ஸ்கேன் பண்ணி எங்களுக்கு அனுப்பிடுவாங்க.(இது பத்தின அதிக தகவலுக்கு சரவணகுமார்(+91-9442507277)அவர்கள தொடர்பு கொள்ளுங்க).
படிச்சுட்டு கண்டிப்பா உங்களோட கருத்துகள commentsல பகிர்ந்துக்குங்க.comment எப்படி போடறதுன்னு தெரியலன நம்ம P.K.செல்வராஜ் அண்ணாவ(+91-9362362114) தொடர்பு கொள்ளுங்க.
வாழ்த்துக்களுடன்,
முன்னாள் மாணவர்கள்-வாகை.
I guess in this pic 3'rd row from right second is Selvaraj Sir(mopperipalayam)....
ReplyDelete