Thursday, September 6, 2012

பொன்விழா ஆலோசனை கூட்ட முன்னேற்பாடுகள்-02.09.2012 வரை

அழைப்பு பத்திரிக்கை(Notice):
கிட்டத்தட்ட 5000 நோட்டீஸ் அச்சடிக்கப்பட்டு வாகராயம்பாளையம்,  கரிச்சிபாளையம் ,வடுகபாளையம்,சுண்டமேடு,சென்னப்பசெட்டிபுதூர், ராயர்பாளையம்,செலம்பராயம்பாளையம்,சந்திராபுரம்,பாப்பம்பட்டி, வலையபாளையம்,கிட்டாம்பாளையம்,கணபதிபாளையம்,சோளகாடுப்பளையம், ஆலம்பாளையம்,பொத்தியாம்பாளையம் மற்றும் பச்சாபாளையம் ஆகிய ஊர்களில் நேரடியாக மக்கள் கைகளிலும்,செய்திதாளுடன் சேர்த்தும் விநியோகிக்கப்பட்டன.



அறிவிப்பு தட்டி(Flex Banner):
வாகராயம்பாளையம் பேருந்து நிலையம் முன்பு,தென்னம்பாளையம் பிரிவு,கிட்டாம்பாளையம்,தென்னம்பாளையம் ஆகிய இடங்களில் பெரிய ப்ளெக்ஸ் தட்டி மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன.



வடுகபாளையம்,கரிச்சிபாளையம்,பாப்பம்பட்டி,வலையபாளையம் பிரிவு மற்றும் சோளகாடுப்பளையம் ஆகிய ஊர்களில் சிறிய ப்ளெக்ஸ் தட்டி வைக்கப்பட்டன. 

குறுந்தகவல்கள்(SMS):
பல்வேறு ஊர்களை சேர்ந்த முன்னாள் மாணவர்களின் கைபேசி எண்கள் சேகரிக்கப்பட்டு குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டன.

பள்ளியில் தற்போதைய தலைமை ஆசிரியர், ஆசிரியர், ஆசிரியைகள் ,பணிமூப்படைந்த ஆசிரியர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் என அனைவரையும் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் தொடர்புகொண்டு  ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு வைக்கப்பட்டது.

ஆலோசனை கூடம் நடைபெறும் இடம் முடிவு செய்யபடுகிறது. கலந்துகொள்பவர்களுக்கான தேநீர்,இனிப்பு கார வகைகள் வாங்கப்பட்டன.பங்கேற்பாளர்கள் பற்றிய தகவல்கள் மற்றும் அவர்களின் ஆலோசனைகள் கருத்துக்கள் ஆகியவற்றை சேகரிக்க பதிவேடுகள் அமைக்கப்பட்டன.  

ஆலோசனை கூட்டம் நடைபெறும் இடத்தில இருக்கைகள்,மேஜைகள், நிழல் கொடுக்க சாமியானா மற்றும் தண்ணீர் ஆகியனவை வைக்கப்பட்டு கூட்டம் நடைபெற தயார்நிலையில் வைக்கப்பட்டது. 









கூட்டம் நடைபெற இன்னும் சில மணித்துளிகளே உள்ளன... அனைவரும் மிக படபடப்போடும் எதிர்பார்புக்களோடும் காத்துக்கொண்டிருந்தோம்... 

கூட்டத்தில் நடந்த சுவையான காட்சிகள் மற்றும் நிகழ்வுகள் ஆகியவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்ள நாங்களும் ஆவலோடு இருக்கிறோம் அதற்க்கு நீங்கள் நாளை வரை காத்திருக்க வேண்டுகிறோம்.... 

வாழ்த்துக்களுடன்,
முன்னாள் மாணவர்கள்-வாகை 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் இங்கே பதியுங்கள்..