Thursday, January 24, 2013

மீண்டும் பள்ளிக்கு போகலாம்(1994-95)Get-To-Gather-3

யார் இவங்க? அப்படிங்கற தலைப்புல 94-95 வருட மாணவர்களின் கீழ்க்கண்ட புகைப்படத்த 30.12.12 அன்று நம் வலைத்தளத்தில் பிரசுரம் செய்திருந்தோம்...



ஏன் அப்படி ஒரு ஸ்பெஷல் பதிவுன்னா.... 

இந்த வருட மாணவர்கள் 10ம் வகுப்பு முடிச்ச பிறகுசேர்ந்து புகைப்படம் எடுத்துக்கவே இல்ல, சொல்லபோனா இதுதான் அவுங்களோட முதல் குழும புகைப்படம்(Group Photo).. ரொம்ப வித்தியாசமான விசயமா இருக்குல? இந்த சந்திப்பிற்காக தொடர்புகொண்டபொழுது நிறையபேர் இந்த மாதிரி சேர்ந்து புகைப்படம் எடுக்கணும் அப்படிங்கரக்காகவே வருவதாக சொன்னாங்கன்னு கௌரிசங்கர் அண்ணன் சொன்னார். 

இனி அவங்களோட சந்திப்பின் நிழல்படங்கள்.....  
  
எப்படி இருந்த நீ.....இப்ப இப்படி ஆயிட்டியே.... நலம் விசாரிக்கும் ரவி...



LADIES FIRST....
Boys:நம்ம வழக்கம்போல கடைசி பென்ச்ல தான் உக்காருவோம்..



பழனிசாமி :வா மச்சி குண்டு விளையாடலாம்...
பிரகாஷ் :டேய் மாப்ள நீயே குண்டாதான் இருக்க உன்ன வச்சு விளையாடிடலாமா?  



கீழ்க்கண்ட இந்த புகைபடத்தில இருக்கிறது திரு&திருமதி  ராஜ்குமார் அவர்கள்,இவுங்க குடும்பத்திற்க்கு நம் பள்ளியும் நாமும் ரொம்ப கடமைபட்டிருக்கோம்.. அது என்னன்னு தனி பதிவா தருகிறோம்...  

எனக்கு இவ்வளவு தான் சார் தெரியும் அதுக்கு மேல ஒன்னும் தெரியாது சார்-G.தனபால் 


அடேங்கப்பா இவ்வளவு பெரிய லிஸ்டா? வேறபக்கம் பாக்கிறமாதிரி அப்படியே போயிரவேண்டியதுதான்-விஜயகுமார்

நாங்கள்லாம் அப்பவே அப்படி இப்ப கேக்கவா வேணும்-கார்த்தி.


ஏ சிங்கம்போல நடந்து வாரான் செல்ல பேராண்டி-கௌரிசங்கர்.


நான் ஒரு பச்ச குழந்தைங்க..சொன்ன நம்புங்கப்பா..-பிரகாஷ்


சண்டேனா எங்களுக்கு மூணு மீல்ஸ் வேணும்--விருந்தோம்பல். (தாய்குலமே எங்கள மன்னிச்சுடுங்க) 


உங்கள பாத்தாலே ஒரே சிரிப்பு சிரிப்பா வருது-கௌரி அக்கா.


இனிமே யாரு கோயம்புத்தூர் வந்தாலும் எங்க ஹோட்டல்ல வந்து மறக்காம ப்ரீயா சாப்பிட்டு போகணும்-கவிதா.


நான் கணக்கு சரியா போடலீன எங்கப்பா இந்த எடத்துலதான் அடிப்பாரு தெரியுமா..-ரவி.


நான் ரொம்ப அடக்கமான மாணவின்னு எல்லாரும் சொல்லுவாங்க-பெமினாதேவி.


உங்க நண்பர்கள பார்த்ததுல கடைசீல எங்கள மறந்துட்டிங்களே மக்கா..-குட்டீஸ்.


நானும் இந்த குழந்தை மாதிரித்தான்,ஆசிரியர் பாடம் எடுத்தா,உடனே  தூங்கீருவேன்..

சார் உங்களுக்கே தெரியும் படிக்கறப்ப கேட்டாலே சும்மாதான் நிப்போம்-சத்தியமூர்த்தி 


நான் அப்பவே விஜயகாந்த் மாதிரி பேசுவேன்,ஆங் யார்ற அது..-பழனிசாமி.


ஐய்யா நல்லா இருக்கிங்களா?லம் விசாரிக்கும் மாணவியர்.


வாழ்த்துக்களுடன்,
முன்னாள் மாணவர்கள்-வாகை.  

Tuesday, January 22, 2013

மீண்டும் பள்ளிக்கு போகலாம்(2006-07)Get-To-Gather-2














வாழ்த்துக்களுடன்,
முன்னாள் மாணவர்கள்-வாகை


Wednesday, January 9, 2013

மீண்டும் பள்ளிக்கு போகலாம்(1995-96)Get-To-Gather-1...ஒரு புதிய பாதையின் தொடக்கம்...


அன்று நடந்தது  ஒரு மிக புதிய இதுவரை நிகழ்ந்திராத ஒரு நிகழ்வு.

நம் பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் செய்த உதவிகள் அனைவரும் அறிந்ததே.ஆனால் இது ஒரு வித்தியாசமான முயற்சி.முற்றிலும் ஒரு புதிய சிந்தனையில் உருவாக்கப்பட்ட ஒரு விடயம்.இது சாதாரணமாக நடைபெறும் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு அல்ல...      

இந்த சந்திப்பிற்கான விதை திரு பிரபு சுப்பிரமணியம்  அவர்களின் மனதில் விழுந்தது,உடனடியாக சக பள்ளி  தோழர்களிடம் இப்படிப்பட்ட சந்திப்பின் மீதுள்ள அவர்களது உள்ளக்கருத்தை கேட்டறிய தொடர்பு கொண்ட பொழுது கிடைத்த வரவேற்பு இன்னும் உத்வேகத்துடன் செயல்பட சக்தி கொடுத்தது.

பிரபு ,நந்தகுமார்,சண்முகசுந்தரம்,வடிவேல்,சசிகுமார்,சாந்தி மற்றும் மோகனமணி ஆகியோர் ஒரு குழுவாக இணைந்து செயல்பட்டனர்.1995-96 வருட மாணவர்களின் கைபேசி எண்கள் சேகரிக்கப்பட்டு அனைவருக்கும் சந்திப்பினை பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டதோடு அவர்களது கருத்துக்களும் கேட்டறியப்பட்டது.பின்னர்  சந்திப்பிற்கான நாள்  04.11.2012 என குறிக்கப்பட்டது.

இந்த சந்திப்பிற்க்கு நம் திரு.இரத்தினம் ஐயா(கணக்கு மாஸ்டர்),திரு.திருமூர்த்தி ஐயா மற்றும் சமூக ஆர்வலர் திரு P.K.செல்வராஜ் ஆகியோரை தலைமை தாங்கவும் தங்களை வழிநடத்தி செல்லவும் குழுவினர் முறையாக அழைப்பு விடுத்தது கேட்டுகொண்டனர்.

அதன் பின்னர் ஒவ்வொரு முன்னாள் மாணவ மாணவியருக்கும் முறையாக அழைப்பு விடுக்கப்பட்டது. குறுந்தகவல் அனுப்பப்பட்டன.

இச்சந்திப்பின் சாரம்(Agenda):
1)மாணவர் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் 
2)நம் பள்ளிக்கு நாம் செய்யபோகும் உதவி மற்றும் அதுசார்ந்த ஒரு விவாதம் 
3)உதவிக்கான நிதி திரட்டலும்,நிர்வாக குழு அறிமுகமும்.
4)அனைவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துகொள்ளல்.

04.11.2012: 
சந்திப்பு காலை 10.30 மணிக்கு என ஏற்பாடு,இனிப்பு தேனீர் ஆகியவற்றினை சண்முகசுந்தரமும்,கார வகையை சரவணகுமாரும் தண்ணீர் மற்றும் இதர தேவைகள் ஆகியவற்றை வடிவேல்,சசிகுமார் ஆகியோர் பொறுப்பேற்று ஏற்பாடு செய்தனர்.

முதல் ஆளாக ஜோதிமணி தனது மகனோடு வந்துசேர்ந்தார்.பின் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தனர்.நமது சிறப்பு அழைப்பாளர்களும் வந்து சேர கலைகட்ட துவங்கியது சந்திப்பு. 

திரு பிரபு சுப்பிரமணியம் அவர்கள் நமது சிறப்பு அழைப்பர்களையும் ,வந்திருந்த மாணவர்களையும் வரவேற்று அறிமுகபடுத்தினார். 


அதன் பின் ஒவ்வொரு மாணவரும் தம்மை பற்றியும் தம்முடன் வந்திருந்த குடும்பத்தினரை பற்றியும் கூறி அறிமுகப்படுத்திகொண்டனர்



ஒவ்வொருவருடனான தங்களது அனுபவத்தினை இரத்தினம் ஐயா அவர்களும் திருமூர்த்தி ஐயா அவர்களும் நினைவுகூர்ந்து அனைவருடனும் பகிர்ந்துகொண்டது மறக்க முடியாத ஒரு நிகழ்வாக அமைந்தது.

ஒவ்வொரு மாணவரும் பள்ளியுடனான தங்களது அனுபவங்களையும் வேடிக்கையான சம்பவங்களையும் எதிர்கொண்ட சவாலான விடயங்களையும் பகிர்ந்துகொண்டனர்.


பதினைந்து வருடம் கடந்த ஒரு சந்திப்பில் ஒவ்வொரு நிமிடமும் கொப்பளிக்கும் சிரிப்பும்,பால்ய கால நினைவுகளோடும்,நிறைந்த மனதோடு உணர்வுப்புர்வமாக கடந்துகொண்டிருந்தது.

இதனிடையில் அனைவருக்கும் தேநீர் மற்றும் பலகாரம் வழங்கப்பட்டது...       










(NANO Technology Scientist-Mr.Krishnakumar(in Blue Jeans) & Young Scientist Mr.Balaji(Standing) sharing their thoughts with Thiru Rathinam Sir ,Social activist Mr.P.K.Selvaraj and Thiru Thirumoorthi sir)




சேர்ந்திருந்த ஒவ்வொரு மணித்துளியும் கிண்டலும் கேலியும் தம் உணர்வுகள் பற்றியும் தீரா ஆர்வத்தோடு பகிர்ந்துகொண்டனர் நம் தோழர்கள்.

இடைவேளைக்குப்பின் நாம் பள்ளிக்கு செய்யபோகும் உதவி பற்றி சிறு அறிமுகம் செய்து விவாதத்தனை தொடங்கிவைத்தார் திரு பிரபு.பின் ஏகமனதாக நம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் சேர்ந்து "கலையரங்கம்" கட்டிதருவதென முடிவெடுத்தனர்.கலையரங்க கட்டிடத்திற்கான வடிவமைப்பினையும் அதற்கான செலவு விபரங்களையும் தெளிவாக அனைவரிடத்திலும் எடுத்துசொல்லப்பட்டது.


பின் அதற்கான நிதி திரட்ட ஆரம்பிக்கப்பட்டது,திரு பிரபு முதல் பங்காக ரூபாய்.10000.00கான காசோலையை திரு இரத்தினம் ஐயா அவர்கள் கைகளில் கொடுத்து ஆரம்பித்து வைத்தார் அதன் பின் நந்தகுமார் அவர்கள் 10000,சாந்தி அவர்கள் 5000 ,மோகனமணி அவர்கள் 5000,வடிவேலு அவர்கள் 5000,சசிகுமார் அவர்கள் 5000,சண்முகசுந்தரம் அவர்கள் 5000,சாந்தாராம் அவர்கள் 5000,சரவணகுமார் அவர்கள் 5000 ,K.திலகவதிஅவர்கள் 5000,சுலோச்சனா அவர்கள் 1000,கிருஷ்ணகுமார் அவர்கள் 10000,கனகராஜ் அவர்கள் 5000,தர்மராஜ் அவர்கள் 5000,கரிச்சிபாளையம் D.பிரபு அவர்கள் 5000,குப்புசாமி அவர்கள் 5000மற்றும் ஜோதிமணி அவர்கள் 3000  கொடுத்தனர்.சந்திப்பில் கலந்துகொள்ள இயலாத மாணவர்களுக்கு தகவல் தெரிவித்து நிதி திரட்ட குழு ஏற்பாடு செய்யும் எனவும் அறிவிக்கப்பட்டது .

இந்த பணியினை சிறப்பான முறையில் எடுத்து செல்ல திரு சசிகுமார் அவர்கள் தலைவராகவும் திரு வடிவேல் அவர்கள் பொருளாளராகவும் திரு நந்தகுமார் அவர்கள் பொறியாளராகவும், பிரபு மற்றும் சண்முகசுந்தரம் ஆகியோர் ஆலோசகர்களாகவும் மாணவர்களால் தேர்ந்தேடுக்கப்ட்டனர்.


திரு இரத்தினம் ஐயா அவர்கள் திரட்டப்பட்ட நிதியினை உடனடியாக பொருளாளர் திரு வடிவேலுவிடம் ஒப்படைத்து பணிகள் சிறப்பாக நடக்க தன்னால் இயன்ற உதவிகள் செய்வதா உறுதியளித்தார்.

சமூக ஆர்வலர் திரு செல்வராஜ் அவர்கள் மரம் நடுதல் பற்றியும் அவர் மேற்கொண்டிருந்த மரம் நடுதல் பணி  பற்றியும் இயற்கையை எவ்வாறு காப்பது என்பது பற்றியும் சிறப்புரையாற்றினார்.இது நம் மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பு பெற்றது.அனைவரும் மரம் நட உறுதிபூண்டனர்.



திரு திருமூர்த்தி ஐயா அவர்கள் மாணவர்களை பற்றியும் பள்ளியினை பற்றியும் கூறி அவரது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.

பின் அனைவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
[First Row from Left: 
K.Thilagavathy,Sulochana,Mr.Mrs.Nandakumar,Prabhu Subramaniam with his daughter Akshara ,Thiru P.K.Selvaraj,Thiru Rathinam Sir,Thiru Thirumoorthi Sir,R.Krishnakumar,R.Kanagaraj,Shanthi,Jyothimani(Standing back to Shanthi) & kids.
Second Row from Left: Dharmaraj,Kuppusamy,Shanmugasundaram,Sasikumar,Sudhagarbabu,D.Prabhu .
Third Row from Left: 
Santharam,Mr.Venkatesh(sulochana's Husband),Vadivelu, Saravanakumar]

இறுதியாக நமது பள்ளியின் வலைத்தளம் பற்றி அறிமுகம் செய்துவிட்டு திரு பிரபு அவர்களின் நன்றி நவில்தலோடு சந்திப்பு இனிதே நிறைவுபெற்றது.


இந்த சந்திப்பு மாலை 3.30 மணி வரை நடைபெற்றது.ஒருவருக்கும் பசி பற்றிய நினைவு கூட  வரவில்லை என்பது ஆச்சரியமாக இருந்தது.
நட்பின் பெருமை இதுதான்...பசி தூக்கம் களைப்பு கடந்தது அது......

இந்த சந்திப்புக்கு பிறகான நாட்களில் நம்மை முன்மாதிரியாய் கொண்டு 1994-95,2006-07,1999-2000 வருட முன்னாள் மாணவர்கள் சந்தித்து பள்ளிக்கு உதவிகள் செய்திட முடிவெடுத்துள்ளனர்.இன்னும் பல மாணவர்கள் இது போன்ற சந்திப்பு நடப்பதற்க்கான முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர், அதற்க்கு பொன்விழா குழு சிறப்பான உதவிகள் செய்துவருகின்றனர். 

அதனால் தான் இது ஒரு சாதரணமான முன்னாள் மாணவர்கள் சந்திப்பு அல்ல, இது ஒரு வித்தியாசமான முயற்சி,முற்றிலும் ஒரு புதிய சிந்தனையில் உருவாக்கப்பட்ட ஒரு விடயம்...

வாழ்த்துக்களுடன்,
முன்னாள் மாணவர்கள்-வாகை.