அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்,
2012ம் வருடம் மிக சிறப்பு வாய்ந்த வருடமாக அமைந்திருக்கிறது, நமது நாடு ஒலிம்பிக் போட்டிகளில் எப்போதும் இல்லாத அளவுக்கு ஆறு பதக்கங்களை வென்று வந்திருக்கிறது அவற்றில் இரண்டு பதக்கங்கள் பெண் வீராங்கனைகள் வென்றுகொடுத்தது அளவில்லா மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அந்த மகிழ்ச்சிக்கு சற்றும் குறையாத வகையில் நாம் படித்த வாகை மேல்நிலை பள்ளி தனது 50 வருட சேவையை எட்டியுள்ளது ,இது போன்ற நிகழ்வுகள் மிகவும் அரிதானவை.

இந்த பள்ளியில் படிக்குங்கால் அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவங்களை கொடுத்திருக்கலாம்,அது படிப்பாக இருக்கலாம்,விளையாட்டாக இருக்கலாம் ,மகிழ்ச்சிகரமானதாக இருக்கலாம் ஏன் துக்ககரமனதாக கூட இருக்கலாம்.அவை எதுவாக இருந்தாலும்,இப்போது அந்த பள்ளிபருவ நாட்களை நினைத்துபார்க்கும் போது ஒரு வித சந்தோஷ உணர்வு மனதுக்குள் எழுகிறது.
இந்த அரை நுற்றாண்டு காலம் இப்பள்ளி பல்வேறு நிகழ்வுகளை கடந்து இன்னும் வலிமையாக பெருமையாக வரும் காலத்தை எதிர்நோக்கி நடைபோடுகிறது,இப்படிப்பட்ட ஒரு சந்தர்பத்தில் நாம் நம் பள்ளியின் வரலாற்றையும்,பெருமையையும் அது கடந்து வந்த பாதைகளையும்,இன்னல்களையும் இவ்வுலகறிய எடுத்து சொல்லவும்,இப்பள்ளியினை அடுத்த தலைமுறை பள்ளியாக முன்னிறுத்தவும் இப்பொன்விழா கொண்டாட்டம் வழி செய்யும் என கருதி அதற்க்கான முன்னேற்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட ஒரு விழா எடுப்பது நமது கடமையும் கூட,எனவே இந்த கொண்டாட்டத்தில் அனைவரும் தன்னை ஒரு பகுதியாக இணைத்துக்கொள்ள அன்போடு வேண்டிக்கொள்கிறோம்.
இந்த கொண்டாட்டம் நம் பள்ளியின் கொண்டாட்டம் அது நம் தாய்க்கு கொடுக்கும் மரியாதையை போன்றது.இந்த விழாவினை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்ல உங்கள் அனைவரின் வழிகாட்டுதலும் அன்பும் முக்கியமானவை,எனவே உங்கள் உள்ளக் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்,உங்களை இக்கொண்டட்டதில் ஒருவராக இணைத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள ஏதுவாக வருகிற நாள் 02.09.2012 அன்று ஆலோசனை கூட்டம் நம் வாகை பள்ளியிலே நடைபெறவுள்ளது,இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்தி பள்ளிக்கு உதவிடுவீர்.
தொடர்புக்கு:
9842381818, 9095017383, 9362362114, 9842219212, 9842323009
9345245279, 9442507277, (0)9880057050.
இன்னும் நீங்கள் அறியாத புதிய தகவல்கள் இந்த தளத்தில் பகிரப்படவுள்ளன,காத்திருங்கள்......
என்றும் அன்போடு,
முன்னாள் மாணவர்கள்-வாகை
முன்னாள் மாணவர்கள்-வாகை
romba nalla vanthuiruku
ReplyDeletePlease update news about our SCHOOL
ReplyDeleteI love my school...
ReplyDelete